Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பேச்சைக் குறைப்பது நல்லது

பேச்சைக் குறைப்பது நல்லது

பேச்சைக் குறைப்பது நல்லது

பேச்சைக் குறைப்பது நல்லது

ADDED : மே 21, 2010 03:05 PM


Google News
Latest Tamil News
* தரையில் தவறவிட்ட ஒரு பொருளை எடுத்துத்தரும் ஒருவருக்கு நன்றி சொல்கிறோம். ஆனால், விலை மதிப்பில்லாத பல பொருள்களைக் கனிவுடன் நமக்கு அளித்த கடவுளுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது விநோதமானது.

* ஒருவர் உண்மையை மட்டுமே பேச வேண்டும். ஆனால், சில சமயங்களில் உண்மையைச் சொல்வதால் ஆபத்து கூட உண்டாகலாம். அந்த சமயங்களில் பொய் அல்லது உண்மை இரண்டையுமே தவிர்த்து, பேசாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

* பேச்சின் ஆற்றல் தீப்பொறி போன்றது. நாவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவரால் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். எனவே பேச்சைக் குறையுங்கள்.

* வாகனத்தில் செல்பவர்கள் சமநிலை இழந்தால் விபத்துக்குள்ளாக நேரிடும். அதுபோல வாழ்க்கைப் பயணத்தில் அறிவுக்கும் குணத்துக்கும் சமநிலை தவறினால் ஆபத்துக்கு ஆளாக நேரிடும். புலன்களை அடக்குவதோடு நேர்மையான வாழ்க்கை வாழ்வதும் அவசியம்.

* உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் பயனுடையதே. பயனற்ற பொருள்களை கடவுள் படைப்பதில்லை. அவற்றின் மதிப்பை நம்மால் அறிய முடியாது.

-சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us